பஞ்சாப்: காங்கிரஸ் மூத்த தலைவரை திடீரென சுட்டு கொன்று விட்டு பெண் தப்பியோட்டம்

பஞ்சாப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரை தனிப்பட்ட காரணங்களுக்காக சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப்: காங்கிரஸ் மூத்த தலைவரை திடீரென சுட்டு கொன்று விட்டு பெண் தப்பியோட்டம்
Published on

சண்டிகார்,

பஞ்சாப்பில் தார்ன்தரன் பகுதியில் சங்வா கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மேஜர் சிங் தாலிவால் என்பவரின் திருமண மகால் ஒன்று உள்ளது. இதன் அருகே வைத்து, அவரை பெண் ஒருவர் அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளார்.

அதன்பின் அவர் தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிங்கை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், 2 குண்டுகள் பாய்ந்த சிங் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தினர்.

சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றியும் மற்றும் நேரடி சாட்சிகளிடமும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அந்த பெண் சிங்குக்கு நன்றாக தெரிந்தவர் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கி சூடு நடந்து உள்ளது எனவும் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு குர்மீத் சவுகான் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பஞ்சாப்பில் சமீப காலங்களாக அடிக்கடி பகலிலேயே மக்கள் முன்னிலையில், படுகொலைகள் நடந்து வருகின்றன. பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை முதல் சமீபத்தில், லூதியானா கோர்ட்டு அருகே, இரு கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடு சம்பவம் வரை மக்கள் பல படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com