இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண் கைது

இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியுள்ளார்.
இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய  பஞ்சாப் பெண் கைது
Published on: 

சண்டிகர்,

இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஷாபாத் மாவட்டம் பரிட்கோட் பகுதியை சேர்ந்த இளம்பெண் குர்னூர் சிந்து. இவர் பரிட்கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியுள்ளார். மேலும், இந்தியா - சீனா எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் குறித்த உளவு தகவல்களை ராணுவத்தில் பணிபுரியும் 2 வீரர்களிடமிருந்து ரகசியமாக பெற்று அந்த தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.

இளம்பெண் கைது

இந்நிலையில், இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய சிந்துவை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், பெரோஷாபாத் மாவட்டம் ஹசன்வாலி பகுதியில் சிந்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு ராணுவ தகவல்களை அளித்த 2 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com