பஞ்சாப்பில் அதிர்ச்சி: 3 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ai photo
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியை சேர்ந்தவர் சந்தியா கவுர் (வயது 36). இவருக்கு திருமணமாகி கணவரும், 3 குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே, சந்தியாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்குமுன் உயிரிழந்தார். கணவனை இழந்த சந்தியா தனது தாயார் வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

இந்நிலையில், சந்தியா கவுர் நேற்று மாலை வீட்டில் இருந்த 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஒரு குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற சந்தியா எஞ்சிய 2 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு சந்தியா தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com