புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
Published on

சபரிமலை,

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com