ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளிலும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையின் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* அம்பேத்கர், காந்தியின் கருத்துக்களை நாம் பின்பற்ற வேண்டும்.

* இந்தாண்டு நாட்டிற்கு மிக முக்கியமான ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

* 2014 முன்னர் நாடு நிச்சயமற்ற நிலைக்கு சென்று கொண்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகு, நமது அரசு ஒரு 'புதிய இந்தியாவை ' உருவாக்க முன்முயற்சி எடுத்தது.

* உடல்நலப் பராமரிப்புக்கு எனது அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்தது.

* இந்த ஆயுஷ்மன் பாரத் யோஜனா திட்டத்தை ஆரம்பித்தது. கடந்த 4 மாதங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஏழை மக்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார நலன்களைப் பெற்றனர்.

* அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வசதி செய்யப்படும்.

* நான்கரை ஆண்டுகளில் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது .

* நாடு முழுவதும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளது.

* குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்திய குடியுரிமை வழங்குவதை எளிதாக்குகிறது.

* விலைவாசி உயர்வை அரசு கட்டுக்குள் வைத்து உள்ளது.

* மாற்றுத் திறனாளி நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

* ஏழைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

* அரசின் நலத்திட்டங்கள் இடையூறு இன்றி மக்களை சென்றடைகின்றன. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com