உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை நெருங்கிய பேரிடர் மீட்பு குழு

எதிர்பாராத இடையூறுகள் ஏற்படுவதால் தொழிலாளர்களை மீட்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை நெருங்கிய பேரிடர் மீட்பு குழு
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு தடைகளால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வெறும் 10-12 மீட்டர்கள் மட்டுமே டிரில்லிங் செய்ய வேண்டியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லாம் சரியாக சென்றால் மேலும் இரண்டு பைப்களை உள்ளே செலுத்தி தொழிலாளர்களை மீட்டு விட முடியும். எனினும், இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கூற முடியாது. ஏனெனில், எதிர்பாராத இடையூறுகள் ஏற்படுவதால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com