திருப்பதி நடைபாதையில் நுழைந்த மலைப்பாம்பு: பக்தர்கள் பீதி

, நடைபாதை அருகிலுள்ள காட்டு பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



திருப்பதி நடைபாதையில் நுழைந்த மலைப்பாம்பு:  பக்தர்கள் பீதி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று ஏராளமான பக்தர்கள் அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நடைபாதையில் உள்ள மொக்கல்லா மலை அருகே உள்ள படிக்கட்டுகளை நோக்கி பெரிய மலைப்பாம்பு ஒன்று வந்தது.

இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து பீதியுடன் அங்கிருந்து விலகிச் சென்றனர். சிலர் உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்த பாம்பு பிடிப்பாளரான பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பக்தர்கள் தங்களது செல்போன்களில் படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.இதையடுத்து, நடைபாதை அருகிலுள்ள காட்டு பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும், அங்கு வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com