உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த குதுப்மினார்..!

பழம்பெரும் நினைவுச் சின்னமான குதுப்மினார் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த குதுப்மினார்..!
Published on

புதுடெல்லி,

சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து இயற்கையைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பழம்பெரும் நினைவுச் சின்னமான குதுப்மினார் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்பட்டது. குதுப்மினார் முழுவதும் 'அழிவைத் தேர்ந்தெடுக்காதே' என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்திற்கான மையக் கருத்தாக 'ஒரே ஒரு பூமி' என்ற வாசகம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்.இ.பி) தலைமையிலான இந்த உலகளாவிய நிகழ்வு, முதன்முதலில் ஜூன் 5, 1973 இல் அனுசரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம் ஸ்வீடனில் நடைபெறும். 1972இல் நடைபெற்ற ஐநா மாநாட்டின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில், இது நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com