

ஜெய்ப்பூர்,
ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், பிரெஞ்சு போர் விமானமான ரபேல் ரக விமானங்கள் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தைவிட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிரதமரின் நண்பரும், வர்த்தகருமான அனில் அம்பானிக்கு கிடைக்க மோடி சாதகமாக செயல்பட்டுள்ளார். இதன்மூலம் பிரதமரின் ஊழல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார்.