ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கிய ரபேல் விமானம்

26 கடற்படை ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கிய ரபேல் விமானம்
Published on: 

டெல்லி,

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் ரபேல் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

ரபேல் போர் விமானம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது. இந்த போர் விமானங்கள் இந்திய ராணுவத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இதனிடையே, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 26 கடற்படை ரபேல் போர் விமானங்களை இந்திய கடற்படைக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடற்படை சார்ந்த செயல்பாடுகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட இந்த ரபேல் போர் விமானங்கள் வரும் 2028ம் ஆண்டு முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த போர் விமானங்கள் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளன.

ஐஎன்எஸ் விக்ராந்தில் தரையிறங்கிய ரபேல்

இந்நிலையில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலில் ரபேல் போர் விமானம் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கி சோதனை நடத்தப்பட்டது. இந்திய கடற்படையில் இணைப்பதற்கான சோதனைக்காக பிரான்சை சேர்ந்த ரபேல் போர் விமானம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் தரையிறக்கப்பட்டது.

தரையிறக்க முயற்சி வெற்றிபெற்ற நிலையில் கடற்படை ரபேல் போர் விமானம் இந்திய கடற்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது. தற்போது நடத்தப்பட்ட சோதனை இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அல்ல என்பதும் அது டசால்ட் நிறுவனத்திற்கு சொந்தமான போர் விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை கோவா கடல்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

X