ராகிங் விவகாரம்: கல்கத்தா பல்கலை கழக துணைவேந்தர் அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் புது சட்ட கல்லூரி விடுதியில் 4 மாணவர்கள் ராகிங் செய்யப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் அலுவலகம் முன் 3வது நாளாக போராட்டம் தொடருகிறது.
ராகிங் விவகாரம்: கல்கத்தா பல்கலை கழக துணைவேந்தர் அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் போராட்டம்
Published on

இதனை தொடர்ந்து ராகிங் செய்யப்பட்ட 2 ஜூனியர் மாணவர்கள் உள்பட 20 மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 3வது நாளாக போராட்டம் தொடருகிறது. ஆனால் துணை வேந்தர் சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியின் நடவடிக்கைகளுக்கு தடையாக அவர்கள் செயல்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் கூறும்பொழுது, குற்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்கலை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டகல்லூரியின் மூத்த மாணவர்களின் ஒரு பிரிவினர் ஈடுபடும் இதுபோன்ற ராகிங் சம்பவங்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் ராகிங் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என துணைவேந்தர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com