ஜன் தன் வங்கி கணக்குகளில் ஊழல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஜன் தன் வங்கி கணக்குகளில் ஊழல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஏழைகளுக்கான ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகள் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவலின் படி, ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் ரூ. 264 கோடி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஜன் தன் வங்கி கணக்கு தாரரிடம் இருந்து ரூ.17.70 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'இந்தக் கணக்கில் உள்ள பணத்தை வைத்திருப்பவர்களுக்கு யார் பொறுப்பு' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com