ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி
Published on

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று கூறினார்.

இந்த பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி மீது மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பய்வாண்டி கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் உத்தரவாதியாக (Guarantor) உறுதியளித்ததால் ராகுல் காந்திக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, சிவராஜ் பாட்டீல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து, புதிய உத்தரவாதியை ராகுல் காந்தி அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்காக ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். மேலும், இந்த வழக்கில் தனது புதிய உத்தரவாதியாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கலை கோர்ட்டில் ராகுல் காந்தி அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து , ஹர்ஷ்வர்தனை புதிய உத்தரவாதியாக ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com