

சென்னை,
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீபாவின் தந்தை சண்முகத்துக்கு, ராகுல்காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
உங்களுடைய மகள் பிரதீபா தற்கொலை செய்துகொண்டதை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.