ராகுல் தகுதி நீக்கம்: இன்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரகம்

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ராகுல் தகுதி நீக்கம்: இன்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரகம்
Published on

அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பாக, காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரகம் நடைபெறும்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெறும் சத்தியாகிரகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

உண்மை, நீதிக்கான ராகுல் காந்தியின் இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான காங்கிரஸ்காரர்களும், அரசியல் எல்லை கடந்த பொதுமக்களும் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பிரியங்கா காந்தி, பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com