ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்

ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.
ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்
Published on

காந்திநகர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளாக நேற்றும் பஞ்சாபில் அவர் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அவரது இந்த டிராக்டர் பேரணியை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்துகிறார். அவரை போன்ற வி.ஐ.பி. விவசாயிகளால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்கள் குப்பையில் போடப்படும் என்று ராகுல்காந்தி கூறியது பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ஸமிரிதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com