‘வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக ராகுல் காந்தி செயல்படுகிறார்’ - பா.ஜ.க. விமர்சனம்

ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானவர் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பந்தாரி விமர்சித்துள்ளார்.
‘வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக ராகுல் காந்தி செயல்படுகிறார்’ - பா.ஜ.க. விமர்சனம்
Published on: 

புதுடெல்லி,

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ‘பாரத் உச்சிமாநாடு 2026’ நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியாவில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த அவர், இந்திய தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

பிரதீப் பந்தாரி பதிவு

பாரத் உச்சிமாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட நிலையில், அங்கு ராகுல் காந்தி இவ்வாறு பேசியது குறித்து பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு உதவியுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி விரும்புகிறார் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பந்தாரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

வெளிநாட்டு சக்திகள்

“இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் ஜார்ஜ் சோரோஸின் கைப்பாவையாக ராகுல் காந்தி மாறிவிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமர் மோடி அரசை அகற்ற அவர் கெஞ்சுகிறார். இதன் மூலம் நமக்கு தெரியவருவது;-

- ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானவர்.

- ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தில் வெளிநாட்டுத் தலையீட்டை விரும்புகிறார்.

- ராகுல் காந்தி வெளிநாட்டு உதவியுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.

ராகுல் காந்தி இனி எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, அவர் இந்தியாவில் குழப்பத்தை உண்டாக்க விரும்பும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயல்படுகிறார். காங்கிரஸ் இந்தியாவிற்கு எதிரானது.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X