கொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல்காந்தி சந்திப்பு..!

சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
Image Courtesy : Twitter @RahulGandhi
Image Courtesy : Twitter @RahulGandhi
Published on

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, பஞ்சாப்பில் உள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றா.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் முதல்-மந்தி பகவந்த் மான், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை பஞ்சாப்பில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இன்று நேரில் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப்பின் மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா கிராமத்தில் சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். அப்போது சித்து மூஸ் வாலா படத்திற்கு மரியாதை செலுத்திய அவர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் அமர்ந்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com