ரபேல் ஒப்பந்தம்: இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். #RafaleDeal #RahulGandhi
ரபேல் ஒப்பந்தம்: இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார். அனில் அம்பானி நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் ஜெட் ஒப்பந்தத்தை பெற உதவுவதற்காக அனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டு உள்ளார். ஒப்பந்தம் இறுதியாகும் 10 நாட்கள் முன் பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்து உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரகசிய விதிமுறைகளை மீறி உள்ளார். அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com