புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீர‌ர்களுக்கு அஞ்சலி; இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது - ராகுல் காந்தி

புல்வமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி;இந்த நாடே உங்களுக்கு கடன் பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீர‌ர்களுக்கு அஞ்சலி; இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்றதன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வீரர்களின் உயிர்த்தியாகத்தை பலரும் நினைவுகூர்ந்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com