

ராகுல்காந்தி செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் ஆதாரம் இருப்பதாக மந்திரி எம்.பி.பட்டீல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விஜயாப்புராவில் மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை கூற மாட்டார். ராகுல்காந்தியின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டு இருக்கும்.
அதனை அவரே உணர்ந்திருப்பார். செல்போன் ஒட்டு கேட்கப்படுவதற்கான ஆதாரம் இருப்பதால் தான் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தனது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளார். இளம் தலைமுறையினரும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் 3 பிரதமர் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது.
இதற்காகத்தான் ராகுல்காந்தியின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டு இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலேயே முறைகேடு செய்தவர்களுக்கு, செல் போன் ஒட்டு கேட்பது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகும்.' பெங்களூருவில் வெறும் 7½ கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவது ஏன்?. அதற்கான அவசியம் உள் ளதா?. என்றாலும் பிரதமர் வந்தது மகிழ்ச்சி தான்.
பிரதமர் முன்னிலையிலேயே கர்நாடகத்துக்கு மத்திய அரசு செய்யும் அநீதி பற்றியும், வறட்சி நிவாரணம் வழங்காமல் இருப்பது, கர்நாடகத்துக்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் காட்டுவது பற்றியெல்லாம் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். இது வரவேற்கத் தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.