தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும்; ராகுல் காந்தி

நாட்டின் புனிதமான ஒன்றை பாதுகாக்க நடைபெறும் போராட்டம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும்; ராகுல் காந்தி
Published on: 

டெல்லி,

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் பங்கேறனர். அதேவேளை, போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யும்வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம். இந்த நாட்டின் புனிதமான ஒன்றை பாதுகாக்க நடைபெறும் போராட்டம் இதுவாகும். இதை தடுக்க நரேந்திர மோடி, அமித்ஷாவால் முடியாது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com