ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து
x
தினத்தந்தி 28 July 2024 7:28 PM IST (Updated: 29 July 2024 2:25 PM IST)
t-max-icont-min-icon

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மனு பாக்கருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன என பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story