அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.
அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
Published on

சண்டிகார்,

ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு காயமடைந்த அரியானாவை சேர்ந்த இளைஞர் அமித்தை சந்தித்தார். காயமடைந்த அமித்திடம் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள கோக்ரிபூர் கிராமத்திற்கு சென்று அமித்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் வருகை குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்றும், அவர் கோக்ரிபூர் கிராமத்தை அடைந்த பிறகுதான் தங்களுக்கு தகவல் தெரியவந்ததாக கர்னாலில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அரியானாவில் சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் திடீர் வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com