அரியானா: விவசாயி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
அரியானா: விவசாயி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி
Published on

சண்டிகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர் இன்று காலை அரியானா மாநிலம் சோனிப்பேட் மாவட்டம் மடினா கிராமத்திற்கு சென்றார்.

அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயியான சஞ்சய் மாலிக் மகள் தனுவின் திருமண விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு அந்த கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி விவசாயி சஞ்சய் விளைநிலத்தில் நாற்று நாட்டு அவரிடன் குடும்பத்துடன் கலந்துரையாடினார். அப்போது தனது மகள் தனுக்கு திருமணம் நடைபெறும்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ராகுல் காந்தியிடம் சஞ்சய் வேண்டுகோள் விடுத்தார்.

சஞ்சய்யின் வேண்டுகோளை ஏற்று அவரது மகள் தனு திருமண விழாவில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். ராகுல் காந்தி வருகையை அறிந்த கிராம மக்கள் சஞ்சய் வீட்டின்முன் குவிந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com