முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம், கனவுகளை நினைவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம் என கூறினார்
முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
Published on

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி நன்றி

இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு மனமார்ந்த நன்றி. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், அரசியலமைப்புக்கு அளித்த உறுதிமொழியிலும் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம், கனவுகளை நினைவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம்’

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com