3 நாள் பயணமாக மீண்டும் வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி

ராகுல்காந்தி 3 நாள் பயணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் வயநாடு செல்கிறார்.
3 நாள் பயணமாக மீண்டும் வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி
Published on

புதுடெல்லி,

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் வயநாடு, மலப்புரம் உள்பட பல மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இந்த கோர நிகழ்வுகளில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கேரள வெள்ள பாதிப்புகளை ராகுல் காந்தி வயநாடு சென்று கடந்த 11-ம் தேதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி 3 நாள் பயணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் வயநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தி தனது பயணத்தின்போது வயநாட்டில் இரண்டு கட்சி அலுவலகங்களை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3 நாள் பயணத்தின் போது கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் ராகுல்காந்தி சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com