பாத யாத்திரையின்போது சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி..

கர்நாடக மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சாலையின் நடுவே தண்டால் எடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
image tweeted by @rssurjewala
image tweeted by @rssurjewala
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.

ராகுல் காந்தியின் யாத்திரை, கட்சியினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சாலையின் நடுவே தண்டால் எடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ராகுல் காந்தியுடன், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் ஒரு சிறுவன் இணைந்து தண்டால் எடுக்கும்போது பதிவு செய்த புகைப்படத்தை, பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்பு, ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுடன் கைகோர்த்து ஓடியபோது எடுத்த புகைப்படம் வெளியானது. யாத்திரையின் மற்றொரு படத்தில், கட்சிக் கொடியை ஏந்தியபடி ஓடிய டி.கே.சிவகுமாருடன் ராகுல் காந்தி சிறிது தூரம் ஓடினார்.

இதேபோல், மற்றொரு படத்தில் ராகுல் தனது தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசைக் கட்டிக்கொண்டிருப்பதை காண முடிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com