

புதுடெல்லி,
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஜிஎஸ்டி வரியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டியை கபீர் சிங் வரி எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
டாக்டர் ஜெட்லி அவர்களே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஜிஎஸ்டி ஆகியவை இந்திய பொருளாதாரத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி விட்டது. நீங்கள் யாரை விடவும் குறைந்தவர்கள் என்று கூறியுள்ளீர்கள் ஆனால் உங்கள் மருந்து தற்போது எந்த பலனையும் தரவில்லை கொண்டிருக்கவில்லை என நினைக்கின்றேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.