பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல்காந்தி மீறுகிறார்; சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டு


பாதுகாப்பு விதிமுறைகளை  ராகுல்காந்தி  மீறுகிறார்; சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Sept 2025 1:15 AM IST (Updated: 12 Sept 2025 1:16 AM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது.

புதுடெல்லி,

.காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் இசட் பிளஸ் பிரிவில் உள்ளார்.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் துப்பாக்கி ஏந்திய சுமார் 12 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.அத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு பிரிவு என்பதால், ராகுல் காந்தி செல்லும் இடத்தை முன்கூட்டியே உளவு பார்க்கும் பணியும் இதில் அடங்கி உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது.அதாவது முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளது.

இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக சி.ஆர்.பி.எப்-ன் வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதேநேரம் சி.ஆர்.பி.எப்-ன் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்து இருக்கிறது. அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி வரும் ராகுல் காந்தியை மிரட்டும் செயல் எனவும் குற்றம் சாட்டி இருக்கிறது.

1 More update

Next Story