

புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நமது பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும், மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.