45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: ராகுல் காந்தி

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: ராகுல் காந்தி
Published on

திருவனந்தபுரம்,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பாத யாத்திரை இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. தனது பாத யாத்திரையின் போது எளிய மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி அவர்களுடன் கலந்துரையாடியும் வருகிறார். '

இந்த நிலையில், தனது பேஸ்புக் பதிவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களது எதிர்காலத்தினை வளமைப்படுத்துவது எங்களின் கடமை. நாங்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வோம். நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை வலிமையாக்க காங்கிரஸ் உழைத்து வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com