மேற்கு வங்காளத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் தளம் சிதைப்பு: திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் புகார்

காங்கிரசாரே ஹெலிகாப்டர் தளத்தை சிதைத்ததாக திரிணாமுல் காங்கிரசின் ராய்கஞ்ச் நகர தலைவர் ஷிப்சங்கர் ரே குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் தளம் சிதைப்பு: திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் புகார்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் ராய்கஞ்ச் தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத் தில் பங்கேற்கிறார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஒரு ஹெலிகாப்டர் தளம் தயார் செய் யப்பட்டு இருந்தது.

அது ஏற்கனவே முதல்-மந்திரி மம்தா பானர்ஜியால் கடந்த 3-ந் தேதி பயன்படுத்தப்பட்ட தளம் ஆகும்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த ஹெலிகாப்டர் தளம் சிதைக்கப்பட்டு இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் தளத்தை சிதைத்த தாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக ராய்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மொஹித் சென்குப்தா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக போலீசில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தங்கள் மீது களங்கம் விளைவிப்பதற்காக காங்கிரசாரே ஹெலிகாப்டர் தளத்தை சிதைத்ததாக திரிணாமுல் காங்கிரசின் ராய்கஞ்ச் நகர தலைவர் ஷிப்சங்கர் ரே குற்றம் சாட்டியுள்ளார். ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com