சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால்கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷனை மீண்டும் அனுமதித்தது போல் ஆகிவிடும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால்அது 40 சதவீத கமிஷனை மீண்டும் அனுமதித்தது போல் ஆகிவிடும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால்கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷனை மீண்டும் அனுமதித்தது போல் ஆகிவிடும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று கலபுரகி, கொப்பல், பல்லாரி மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதாவின் ஊழல் ஆட்சி நடக்கிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. நமது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தனர். கர்நாடகத்தில் அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் 40 சதவீத ஊழலை செய்துள்ளனர். அதனால் தான் கர்நாடக பா.ஜனதா அரசை 40 சதவீத ஊழல் அரசு என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பா.ஜனதா அரசின் 40 சதவீதகமிஷன் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் மோடி இதுவரை இதுகுறித்து பேசவில்லை. அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜனதாவினருக்கு 40 மிகவும் விருப்பமான எண். கர்நாடக மக்கள் இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெறும் 40 இடங்களை மட்டுமே வழங்குவார்கள்.

இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்களின் பணத்தை கொள்ளையடித்து உள்ளது. ஐதராபாத் கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு அப்போதைய பா.ஜனதா அரசிடம் கேட்கப்பட்டது. அதை துணை பிரதமராக இருந்த அத்வானி நிராகரித்து விட்டார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் மூலம் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள் உருவாகினர். இந்த பகுதியின் வளாச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பா.ஜனதா வெற்றி பெற்றால், அது 40 சதவீத கமிஷனை மீண்டும் அனுமதித்தது போல் ஆகிவிடும். அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com