தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்


தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்
x

ராகுல் காந்தி எத்தனை நாட்கள் தென் அமெரிக்கா நாட்டில் இருப்பார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

புதுடெல்லி,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவை சேர்ந்த 4 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் தென் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா எக்ஸ் வலை தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது ராகுல்காந்தி அரசியல் கட்சி தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் அமைப்பு தலைவர்களை சந்தித்து கலந்துரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர் எத்தனை நாட்கள் தென் அமெரிக்கா நாட்டில் இருப்பார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

1 More update

Next Story