

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்த மோதிலால் வோராவை நேற்று நீக்கினார். புதிய பொருளாளராக அகமது பட்டேலை அவர் நியமித்தார். நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய அகமது பட்டேலுக்கு காங்கிரஸ் பொருளாளர் பதவி, பிறந்த நாள் பரிசாக அமைந்தது.
மோதிலால் வோராவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் (நிர்வாகம்) என்ற புதிய பதவியை ராகுல் காந்தி உருவாக்கி அளித்து உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா, கட்சியின் வெளியுறவு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்து வந்தவர் கரன்சிங் ஆவார்.
முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், கட்சி காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.