

புவனேஸ்வர்
ஒடிசா மாநிலம் போலாங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சிவராஜ் சிங் பங்கேற்றார்.
அப்போது அவர் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும். எம். பி.யுமான ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி ஒரு பொய்யர், ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் என்று விமர்சனம் செய்தார்.
தொடர்பாக சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ். ஐ. ஆர்.) குறித்து ராகுல் காந்தி தவறான கருத்துகளை பரப்பி நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்.
தேர்தல்கள் இல்லாமலேயே ஆட்சியை மாற்ற அவர் முயற்சிக்கிறார். ஒரு லட்சம் பொய்யர்கள் இறந்த நாளில் ராகுல் காந்தி பிறந்தார். அவர் பொய்களைப் பரப்பி ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த உழைக்கிறார்.
இதற்கு முன்பும் அவரது கட்சி, நாட்டில் அவசரநிலை மூலம் ஜனநாயகத்தை ஒழிக்க முயன்றது. பா.ஜ.க. வின் ஜனநாயகத்தை காப்போம், ஒழிப்போம் என்ற பேரணியில் நான் இங்கு பங்கேற்பேன். வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்காகவே எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது என்பதை மக்க ளுக்கு உணர்த்த வேண்டும். காங்கிரசும், அதன் கூட்ட ணிக் கட்சிகளும் இந்த நடைமுறை குறித்து மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.