காப்பாற்றுவதை விட்டு விட்டு மூழ்கும் கப்பலில் இருந்து குதித்த ராகுல் காந்தி - பாரதீய ஜனதா கிண்டல்

காப்பாற்றுவதை விட்டு விட்டு மூழ்கும் கப்பலில் இருந்து ராகுல் காந்தி குதித்ததாக பாரதீய ஜனதா கிண்டல் செய்துள்ளது.
காப்பாற்றுவதை விட்டு விட்டு மூழ்கும் கப்பலில் இருந்து குதித்த ராகுல் காந்தி - பாரதீய ஜனதா கிண்டல்
Published on

ஐதராபாத்,

பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான், ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார் என்பது உங்களுக்கு தெரியாது. ஒரு கப்பல் மூழ்கினால், அதை காப்பாற்றுவதற்கு அதன் கேப்டன் கடைசி வரை முயற்சிப்பார் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கப்பலில் இருந்து முதலில் குதித்தவர் கேப்டன்தான் என்று கிண்டல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com