ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி வாக்குறுதி

ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி வாக்குறுதி
Published on

ஜெய்பூர்,

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல், காங்கிரஸ் தரப்பிலும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள பொஹ்ரான் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி கூறியதாவது :- மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை நீங்கள் அமர்த்தப்போகிறீர்கள்.

ஆட்சி அமைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன்களை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்யும். மாநிலத்தில் உள்ள எந்த விவசாயிகளிடம் வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுப்பாருங்கள். நான் தவறான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். நான் என்ன சொல்வனோ அதையே செய்வேன். நாங்கள் என்ன சொன்னமோ அதை முதலில் இருந்தே செய்யத்துவங்குவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com