'ராகுல் மக்களவைக்கு வந்திருக்கக்கூடாது' சுஷில் மோடி கருத்து

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தியின் எம்பி. பதவி பறிக்கப்பட்டது.
'ராகுல் மக்களவைக்கு வந்திருக்கக்கூடாது' சுஷில் மோடி கருத்து
Published on

புதுடெல்லி, 

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தியின் எம்பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் மக்களவைக்கு வந்திருந்து, அங்கு சிறிது நேரம் இருந்தார். இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில் மோடி எம்.பி., நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அவர் நாடாளுன்றத்திற்கு வந்து இருக்கக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவர் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் மீதான தீர்ப்பை மேல்கோர்ட்டு நிறுத்திவைத்தால் தகுதி இழப்பு தவிர்க்கப்படும். ஆனால் அது மிகவும் அரிதானது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூரத் கோர்ட்டு ராகுல் காந்தியை தண்டித்த விவகாரத்தில் பாட்னா கோர்ட்டில் சுஷில் மோடியும் அவதூறு வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com