பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

‘ஆர்.எஸ்.எஸ். தேர்வு செய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க விரும்புகிறார்’ என பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளில் தகுதியானவர்களை நியமிப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், மாணவர்களே, எழுங்கள். உங்கள் எதிர்காலத்துக்கு ஆபத்து. உங்களுக்கு உரியதை ஆர்.எஸ்.எஸ். பறித்துக்கொள்ள விரும்புகிறது. சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டிருப்பதை கீழ்க்காணும் கடிதம் காட்டுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் செய்ய உள்ள மாற்றம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பவுண்டேசன் கோர்ஸ் மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்து, அதன் அடிப்படையில்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளையும், பணி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் அலுவலக பரிந்துரையைத்தான் மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் ஏற்று கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com