தீவிரவாதிகள் கொலைக்கு எதிராக பொது வேலைநிறுத்தம்; காஷ்மீரில் 2வது நாளாக ரெயில் சேவை ரத்து

தீவிரவாதிகள் கொலைக்கு எதிரான பொது வேலை நிறுத்த அறிவிப்பினால் காஷ்மீரில் 2வது நாளாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தீவிரவாதிகள் கொலைக்கு எதிராக பொது வேலைநிறுத்தம்; காஷ்மீரில் 2வது நாளாக ரெயில் சேவை ரத்து
Published on

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தய்பா இயக்கத்தினை சேர்ந்தவர்கள். அவர்களில் 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் பின்னணியாக செயல்பட்ட லக்வியின் மருமகன் மற்றும் முக்கிய தளபதிகளும் அடங்குவர்.

இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சுயமுடன் தீர்மானிப்பதற்கான உரிமை வேண்டும் என கூறி ஹுரியத் மாநாட்டு கட்சி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சுதந்திர முன்னணி ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனை தொடர்ந்து இன்று 2வது நாளாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com