ரெயில் டிக்கெட் முன்பதிவு - ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டம்

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போது 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஈடான கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் பரவியது. இதையடுத்து ரெயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரெயில்வே அமைச்சகத்தின் 2020 தேதியிட்ட சுற்றறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வழங்கப்படமாட்டாது. இருப்பினும் 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வேண்டும் என்றால் அதற்காக முழு தொகையை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com