ரெயில் டிக்கெட் வருமானம் உயர்வு பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பு

நாடு முழுவதும் மக்கள் இடையே ரெயில் பயணத்துக்கு ஆதரவு பெருகி வருவதை ரெயில்வே வெளியிட்டு உள்ள புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ரெயில் டிக்கெட் வருமானம் உயர்வு பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

201718 நிதி ஆண்டில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி. முந்தைய 201617 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ.2 ஆயிரத்து 551 கோடி அதிகம் ஆகும்.

ரெயில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் டிக்கெட் வருமானம் பெருகி உள்ளது.

புறநகர் ரெயில் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இணையதளம் வழியாக ரெயில் டிக்கெட் முன்பதிவும் 6.3 சதவீதம் பெருகி இருக்கிறது.

ஒட்டுமொத்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

201617 நிதி ஆண்டில் ரெயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 8219.38 மில்லியன் ஆகும்.

201718 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 8267.32 மில்லியனாக உயர்ந்தது.

ரெயில் டிக்கெட்டுகளுக்கு இணையாக சில விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை குறைத்து, நிர்ணயித்து இருந்தபோதும் ரெயில் பயணிகள் டிக்கெட் வருமானமும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com