பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வந்துவிடுங்கள் ரெயில்வே வாரியம் அறிவுரை

ரெயில் பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வந்துவிடுங்கள் என ரெயில்வே வாரிய சேர்மன் ஏகே மித்தால் அறிவுரை வழங்கி உள்ளார்.
பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வந்துவிடுங்கள் ரெயில்வே வாரியம் அறிவுரை
Published on

வாரணாசி,

ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் இந்திய ரெயில்வே தரப்பில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் மனிதர்கள் சாப்பிட பொறுத்தமற்றவை என சமீபத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பயணிக்கு வழங்கப்பட்ட வெஜிடேபிள் பிரியாணியில் பல்லி கிடைந்தது. இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வேயில் வழங்கப்படும் உணவு வகைகள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துவரும் நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

வீட்டில் இருந்தே பயணிகள் உணவை தயார் செய்து எடுத்து வந்துவிடலாம், வீட்டு உணவிற்கு மாறான தரமான உணவு கிடையாது, என கூறிஉள்ளார் ரெயில்வே வாரிய சேர்மன் ஏகே மித்தால்.

வழங்கப்படும் உணவுப் பெருட்களின் தரத்தில் ஒப்பந்தக்காரர்களால் சமரசம் செய்துக் கொள்ளப்படுவதால் பயணிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் சுமார் 15 லட்சம் பேர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள், ரெயில்வே மிகவும் தீவிரமான சவாலை எதிர்க்கொண்டு உள்ளது. இப்பிரச்சனைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரெயில்வே சொந்தமான சமையல் அறைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்கிறது, ஒரு வருடத்திற்குள் இது செயல்பாட்டிற்கு வரும்.

இ-கேட்ரிங் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, இ-கேட்ரிங் மூலம் பயணிகள் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என கூறிஉள்ளார் ஏ.கே. மித்தால்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com