ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நிகழாண்டு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கேபினட் கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்தார்.

ரெயில்வேயில் பணியாற்றும் 11 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும், அரசுக்கு ரூ.2,024 கோடி செலவு ஏற்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். தொடர்ந்து ஆறு ஆண்டாக ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருவதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com