யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெயர் மாற்றம் - மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெயர்களை பஞ்சகங்கா என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் மாற்றி உள்ளது.
யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெயர் மாற்றம் - மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம்- கார்வார் இடையே இருமார்க்கமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்:-16595/16596) இயக்கப்பட்டு வருகின்றன. மங்களூரு நகருக்குள் செல்லாமல் பண்ட்வால், சூரத்கல் வழியாக செல்லும் இந்த ரெயில்கள் யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்த ரெயில்களின் பெயர்களை பஞ்சகங்கா என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் மாற்றி உள்ளது. இதுகுறித்து உடுப்பி-சிக்கமகளூரு தொகுதி பா.ஜனதா எம்.பி. ஷோபா கரந்தலாஜே கூறும்போது, கடலோர மாவட்டங்களில் உள்ள 5 முக்கிய ஆறுகளில் பஞ்சகங்காவும் ஒன்று. பஞ்சகங்கா என்பது கடலோர மக்களின் வாழ்க்கை முறை, விவசாயம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை குறிக்கிறது.

இதனால் யஷ்வந்தபுரம்-கார்வார் ரெயில்களுக்கு பஞ்சகங்கா எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ் அங்கடியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் எங்கள் கோரிக்கையை ஏற்று ரெயில்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இருப்பினும் எங்கள் கோரிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தினோம். எங்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com