அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வேக்கு முதல் இடம்; சட்ட அமைச்சகம்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வே முதல் இடம் வகிக்கின்றது என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வேக்கு முதல் இடம்; சட்ட அமைச்சகம்
Published on

இதில், மிக அதிக எண்ணிக்கையிலான தீர்க்கப்படாத வழக்குகள் கொண்ட அரசு துறையாக ரெயில்வே உள்ளது. அதற்கு எதிராக 66 ஆயிரத்து 685 வழக்குகள் உள்ளன. மொத்தமுள்ள இந்த வழக்குகளில், 10 வருடங்களை கடந்த நிலையில் 10 ஆயிரத்து 464 வழக்குகள் உள்ளன.

ரெயில்வேக்கு அடுத்த நிலையில், நிதி அமைச்சகம் 15 ஆயிரத்து 646 வழக்குகளும், தகவல் தொடர்பு அமைச்சகம் 12 ஆயிரத்து 621 வழக்குகளும், கொண்டுள்ளன. உள்துறை அமைச்சகம் 4வது மிக அதிக எண்ணிக்கையிலான 11 ஆயிரத்து 600 தீர்க்கப்படாத வழக்குகளை கொண்டுள்ளன.

கடந்த அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி கூறும்பொழுது, அரசு மிக பெரிய வழக்குதாரராக உள்ளது. வழக்கின் ஒரு கட்சிக்காரராக அரசு உள்ள நிலையில் அதிலேயே பெரும்பகுதி நேரத்தினை நீதிமன்றம் செலவிட வேண்டியுள்ளது. இந்த சுமையை குறைத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

சமீபத்தில் சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத், இந்த கருத்தினை எதிரொலிக்கும் வகையில், வழக்குகள் மிக கவனமுடன் மற்றும் கருத்தில் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் இந்த சுமை குறையும் என கூறினார். இதுபற்றிய தகவலையும், பல்வேறு அமைச்சகங்களுக்கு தலைமை வகிக்கும் தனது சக அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com