டெல்லி-வாரணாசி இடையிலான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டது

டெல்லி-வாரணாசி இடையிலான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லி-வாரணாசி இடையிலான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டது
Published on

ரெயில்வே துறையால் நாட்டின் அதிவிரைவு ரெயிலான டிரெயின் 18 வருகிற 29-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது. புல்லட் ரெயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயில் 16 பெட்டிகள் உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலே தயார் செய்யப்பட்ட இந்த ரெயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம் என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com