"பணக்காரர்களை மட்டும் மனதில் வைத்தே ரெயில்வே கொள்கைகள்.." - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கட்டண உயர்வு, டிக்கெட் ரத்து கட்டணம் உயர்வு, விலை உயர்ந்த பிளாட்பார்ம் டிக்கெட் போன்றவற்றுக்கு மத்தியில் ஏழைகள் கால் பதிக்கக்கூட முடியாத 'எலைட் ரெயிலின்' படத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

விளம்பரத்துக்காக குறிப்பிட்ட ரெயில்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதால் சாமானியர்களின் ரெயில்கள் நலிவடைகின்றன.

உண்மையில், ரெயில்வே பட்ஜெட்டைத் தனியாக தாக்கல் செய்யும் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவந்தது, இந்த சுரண்டல்களை மறைக்கும் ஒரு சதி. ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ரெயில்வேயின் கொள்கைகள் பணக்காரர்களை மட்டும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இது ரெயில்வேயை நம்பி வாழும் 80 சதவீத இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். மோடி மீது நம்பிக்கை வைப்பது துரோகத்திற்கான உத்தரவாதம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com